நல்லமரமும் நச்சு மரமும்

ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை

நூல்     - தமிழின்பம்


வினாக்கள்

  1. குளத்தைக் கண்டபோது இளவரசனும் நண்பனும் அடைந்த மகிழ்ச்சியான மனநிலையைக் கட்டுரையாசிரியர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? ஏன் அவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

  1. இவ்வுரைப்பகுதியில் காணப்படு்ம் அணிகளை இனம் கண்டு அவற்றுள் இரண்டின் சிறப்பினை எடுத்துக் காட்டுக.

  1. இக்கதையில் ஆசிரியர் கூறவந்த கருத்துக்களை சுருக்கி ஒருபந்தியில் தருக.

  1. திருக்குறளை இவ்வுரைப்பகுதியுடன் ஆசிரியர் எவ்வாறு தொடர்பு புடத்துகிறார்? என்பதனை விளக்குக.

  1. ஆசிரியர் தமது கருத்துக்களை சுவைப்பட எடுத்துரைப்பதற்கு எத்தகைய உத்திமுறைகளைக் கையாண்டுள்ளார் என்பதனை விளக்குக.

  1. இவ்வுரைப்பகுதியில் கூறப்படும் நல்லமரம் பற்றிய கருத்துக்களைத் தொகுத்துக் கூறுக.

  1. இவ்வுரைப்பகுதியில் கூறப்படும் நச்சுமரம் பற்றிய கருத்துக்களை தொகுத்துக் கூறுக.

 

விடை சுருக்கமாக

  1. “தோயும் திரைகள் அலைப்பத்தோடார் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் வெள்ளை யன்னம் காணாய்“ குளத்தைக் கண்ட போது ஏற்பட்ட இன்பத்தை மேற்குறிப்பிட்ட வரிகளினூடாக இனிது காட்டுகிறார்.

·         பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அரகே அழைப்பது போல அமைந்ததாகக் கூறுகிறார்.

·         பொய்கையைக் கண்டவுடன் தாய்முகம் கண்ட சேய்போல மனங்களித்து நீரைப் பருகியதாகக் கூறுகிறார்.

·         அடுக்கடுக்காக அலைகள் வந்து தாகத்தை தணித்ததாகக் கூறுகிறார்.

·         இளவரசனும் தோழனும் வேட்டையாடச் சென்று அலைந்து திரிந்து களைப்புற்றதால் மெய் சோர்ந்து, நாவறண்டு, நடப்பதற்கு வலியற்றவரான போது தென்றற் காற்றும் நன்னீர்ப் பொய்கையும் மனத்தையும் மெய்யையும் குளிரச் செய்தமை.

  1. அணிகள்

·         அரசனும் தோழனும் தாய் முகம் கண்ட சேய் போல நன்னீரைப் பருகி மகிழ்ந்தார்கள்.(உவமை) 

உவமானம்        தாய் முகம் கண்ட சேய்  

உவமேயம்        அரசனும் தோழனும்  

பொதுத்தன்மை    - மகிழ்தல்

·         தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல அலைகள் கரையருகே வந்தன.(தற்குறிப்பேற்றம்) 

பொதுத்தன்மை    பயன்

  1.  

·         அரசிளங் குமரனும் தோழனும் வேட்டையாடச் செல்லுதல்

·         அலைந்து களைப்புறுதல்

·         நண்ணீர் பொய்கையைக் கண்டு இன்புறுதல்.

·         நல்லமரத்தின் சிறப்பு

·         நச்சு மரத்தின் கொடுமை

  1.  

·         “நச்சப் படாதவன் செல்ம் நடுவூரில் நச்சு மரம் பழுத்தற்று“

·         “நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கட் பட்ட திரு“

  1.  

·         இயற்கையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்

·         நல்லமரம் நச்சு மரம் என்ற மரங்களை அடிப்படையாகக் கொண்டு சுவைப்படக் கூறுகிறார்.

  1. நல்லமரம் பற்றிய கருத்து

·         கதிரவன் வெம்மையை மறைக்கும் பசுமையான மரத்தின் நிழல்

·         பொன் நிறக் கனிகள் பசி தீர்க்கும்

·         கனிகளின் இனிய மணம்

·         கற்பகத் தரு

·         மருந்தாக உதவிய மரத்தின் பட்டை

·         பயனுள்ள மரம்

  1. நச்சு மரம் பற்றிய கருத்துக்கள்

·         பாழான பழுமரம்

·         கண்களைக் கவரும் கிகள் ஆனால் நச்சு நிறைந்தவை.

·         உண்டாரைக் கொள்ளும்

·         இலைகளும் தலழகளும் இன்மையால் நிழல் தராது.

·         கொம், கிளை என்பவற்றில் கூறிய முள் நிறைந்திருக்கும்.

·         பயனற்ற மரம்.

 

வினாக்கள்

1.      அரசிளங் குமரனும் தோழனும் நல்லமரத்தின் மூலம் பெற்றுக் கொண்ட நன்மைகள் மூன்றினைக் குறிப்பிடுக.

2.      நல்லமரம் நல்லார் கைப்பட்ட செல்வத்திற்கு உவமிக்கப்படுவதற்கான காரணங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.

3.      பொய்கைக்கும் அறிவுடையாருக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது?

4.      பண்புடைமைபற்றித் தோழன் கூறிய விடயங்களை எழுதுக.

5.      நச்சு மரம் கடுங்காற்றில் அகப்பட்டு முறிந்து வேரற்று வீழ வேண்டும் என்று ஊரார் இறைவளை வழிபடுவதற்கு காரணம் யாது?

6.      “பேதையர் கைப்பட்ட செல்வம் போல் அமைந்த நச்சுமரக் கனிகள்“

·         இதில் அமைந்துள்ள அணியாது?

·         இவ்வணியின் பொருத்தப்பட்டை சுருக்கமாக விளக்குக.

7.      பின்வரும் உவமைத் தொடர்கள் எவ்வெவற்றைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை எழுதுக.

·         இன்முகம் கொண்டு எதிர் சென்று அழைப்பது போல....

·         தாய் முகம் கண்ட சேய் போல ....

·         பாசிலைப் பந்தர் வேய்ந்தாற் போல .........

·         கையில் வெண்ணெய் இருக்க நெய் தேடி அலைந்தாற் போல ....

·         ஊருணியின் நீர் போல .....

 

விடைகள் சுருக்கமாக.

1.      நல்லமரத்தின் மூலம் பெற்றுக் கொண்ட நன்மைகள்

·         மரத்தின் நிழலிலே தங்கி இளைப்பறியமை

·         கனிகளை உண்டு பசியாறியமை

·         அம்மரத்தின் பட்டைச் சாற்றின் மூலம் தலைக்குத்தைப் போக்கியமை.

2.      நல்ல மரம், நல்லார்க் கைப்பட்ட செல்வத்திற்கு உவமிக்கப்படுவதற்கான காரணம்.

·         பசியிலும் வெய்யிலிலும் வருந்தி வருவோரை இனிய முகத்தோடு ஏற்றல்.

·         அவரது குறைகளை தீர்த்தல்

3.      பொய்கைக்கும் அறிவுடையோருக்கும் இடையிலான தொடர்பு.

·         நீர் நிறைந்த பொய்கை எப்போதும் தண்மை வாய்ந்து விளங்குதல் போல, அறிலுடைய செல்வர் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குதல்.

·         தாத்தால் வருந்தி வருவோறுக்கு தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல, கல்வியும் செல்வமும் பூத்த மேலோர் வறிஞருக்கு வரையாது பொருள் வழங்கும் வள்ளல்களாக இலங்குவர்.

4.      பண்புடைமை பற்றித் தோழன் கூறிய விடயம்.

·         தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன் மரம் போலவும் வாழ்வதே பண்புடைமை.

5.       

·         நிழலின்மை

·         நச்சுப் பழம்

·         முள்உள்ளமை

6.        

·         உவமையணி

·         பேதையர் கைப்பட்ட செல்வத்தால் ஒருவருக்கும் பயன் இல்லை. அதே போல் நச்சு மரக் கனிகளும் பிறருக்கு பயன் படாமை.

7.       

·         இளந்தென்றல் எழுந்தமை

·         வாவியைக் கண்ட போது அடைந்த மகழ்ச்சி

·         மரமும் அது தந்த நிழலும்

·         மரத்தின் பட்டையின் சாறு தலைக்குத்துக்கு மருந்தாக அமைந்தமை.

·         ஊராருக்கு பயன் பட்டமை.

பின்செல்

குறுவினாக்கள்

தரம் 11

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.