அல் முபாறக் மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை)
2007ம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்ட புதிய பாடத்திட்டத்துக்கு அமைய தமிழ் மொழியும் இலக்கியமும் பாடப் பரப்புக்களில் ஆசிரியர்களதும் மாணவர்களதும் மேலதிக விளக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காகவும் புதிய பாடத்திட்டத்தின் 10ம், 11ம் தரங்களுக்கான பாடப்பரப்பினை உள்ளடக்கியதாக இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தளம் மாணவர்களதும் ஆசிரியர்களதும் அவசியத் தேவை காரணமாக மிக மிக அவசரமாக பல்வேறு சிறமங்களுக்கு மத்தியில் இத்தளத்தை உருவாக்கியுள்ளேன். மிகவும் சிறமத்துக்கு மத்தியில் என்னால் கூடுமான வரை தேடி முழுமையாக்கியுள்ளுன். மேலும் புதிய விடயங்களைப் புகுத்தவும் உத்தேசித்துள்ளேன். மேலும் மாணவர்கள் பயிற்ச்சிகள் பெறும் நோக்கில் குறுவினாக்களும், கட்டுரை அமைப்பு வினாக்களும் இத்தளத்தில் தொகுத்துள்ளேன. இவ்வினாக்கள் பாடத்தை கிரகித்தல் என்பதையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதையும் அறியத்தருகிறேன்.
புதிய பாடத்திட்ட நூல்கள் மாணவர் மையக் கல்வியை வலியுறுத்துவதாலும் அவற்றின் அமைப்பும் மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் மாணவர்களது செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாலும் மாணவர்களுக்கு இத்தளம் பெரும் துணைபுரியும் என நினைக்கிறேன்.
கல்வித்துறை பாரிய அளவில் இன்று மாற்றத்துக்குள்ளாகி
வரும் இக்கால கட்டத்தில் வகுப்பறைக் கல்வி எனபதில் இருந்து தகவல் தொடர்பாடல் (IT) ஊடான கற்றல் என்ற நிலைக்கு
பரினாமித்து வரும் இலங்கையின் கற்றல்
கற்பித்தல் செயற்பாடுகளில், இத்தளம் தகவல் தொழிநுட்பத்தை வகுப்பறைக்குக் கொண்டு
செல்லும் என எண்ணுகின்றேன். இது இத்தளத்தை உருவாக்கியதன் முக்கிய நோக்கங்களுள்
ஒன்றாகும்.
இத்தளத்தை மிகவும் குறுகிய காலத்தி்ல் அமைத்து உங்கள் பார்வைக்கு விட்டுள்ளேன். இதற்கு துணைபுறிந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தளம் நிச்சயம் குறைகளைக் கொண்டிருக்கலாம் அவற்றை நிவர்த்தி செய்ய ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் ஆசிரியப் பெருந்தகைகளிடம் வரவேற்கிறேன். உங்கள் ஆலோசனைகளை mwmramzy@gmail.com எனும் மின்அஞசல் முகவரிக்கு மின்அஞசல் செய்யுமாறு தாழ்மையோடு கேட்கிறேன்.
நன்றி
பிரியங்களுடன்
அல் முபாறக் மத்திய கல்லூரி
(தேசிய பாடசாலை)
மல்வானை.
NIE | Ministry of Education | School Net | Department Examination
AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others