AL Mubarak National School

Malwana.


அல் - முபாறக் அன்றும் இன்றும்………………….

வரலாற்றுப் புகழ் மிக்க மள்வானையின் கண் அழகுற அமைந்து தீவெங்கும் அறிவொளி பரப்பி நிற்கின்றது, அல்முபாறக் கலைக்கூடம். இதன் மூலகர்த்தாவான மர்ஹூம் ஏ.எல்.எம். ஸாலி ஹாஜியாரின் முயற்சியால் 1921ம் ஆண்டில் இதற்கான காணி 1 1/2 ஏக்கர் அரசு மூலம் சுவீகரிக்கப்பட்டது. அன்னார் தலைமையில் ஒருங்கினைந்த ஊர்மக்கள் நிறுவிய 60‘   20‘ அளவிலான அன்றைய மேல்மாகாண அரச அதிபர் ஜே.ஜி. பிரேஸர் அவர்கள் 01.01.1922இல் திறந்து வைத்தார்.

“வல்கம அரசாங்கத் தமிழ்ப் பாடசாலை“ எனும் பெயர் கொண்டழைக்கப்பட்ட இப்பாடசாலையில் 3ம் வகுப்பு வரையே பாடப் போதனைகள் நடாத்தப்பட்டன. ஆசிரியர் குழுவில் மூன்று பேர் இடம் பெற்றனர். இப்பாடசாலை 1925ம் ஆண்டில் 5ம் வகுப்பு வரை போதிக்கும் பாடசாலையாயிற்று. 1928ம் ஆண்டில் “துவி பாஷா“ பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட போது 8ம் வகுப்பு வரை பாடங்கள் போதிக்கப்பட்டன. மாணவர் தொகை 155 ஆக அதிகரித்திருந்தன.

இந்நிலையில் மாணவர் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்தமையால் மேலும் ஒரு கட்டிடம் அவசியப்பட்டது. எனவே 1936ம் ஆண்டில் மற்றுமொரு கட்டிடம் கட்டப்பட்ட வேளையில் கற்போர் தொகை 176 ஆகியிருந்தது. மாணவர் தொகை படிப்படியாக விருத்தியுரவே கட்டிட வசதிகளில் மேலும் டீதவையேற்படலாயிற்று. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அன்றைய களனித் தொகுதியின் உருப்பினராக விளங்கிய முன்னைநாள் ஜனாதிபதி மாண்புமிகு ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் பெற்றுத் தரப்பட்ட 100‘  20‘ அளவிலான கட்டிடமே “உமர் மண்டபம்“ என அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு சிறிது சிறிதாக வளர் நடை பயின்ற எமது கல்லூரி ஆண்கள் பாடசாலையாகவே இயங்கி வந்தது. எனவே பெண்களும் சீர் கல்வி பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் எனும் நோக்கில் 1950ம் ஆண்டு கலவன் பாடசாலையாக மாற்றப்பட்டது. எனினும் கல்வி அபிவிருத்தியிலும் குறிப்பாக பெண்கல்வியிலும் அவ்வளவு அக்கறை செலுத்தப்படாதிருந்த அக்கால வேளையில் கழைய மாணவர்கள் வருத்தமுற்று ஒன்றிணைந்து கலந்துரையாடினர். 1950ம் ஆண்டில் உதயமாகியது “பழைய மாணவர் சமாஜம்“ இதன் பணி பரந்து விரிந்தது. “பழைய மாணவர் மஜ்லிஸ்“ என்று பெயர் மாற்றம் பெற்று இப்பகுதியில் கல்வி, சமூக ரீதியில் இது ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. 16.01.1950 முதல் பிள்ளைகள் முதன் முறையாகப் பாடசாலை வரலாயினர்.

அன்றைய களனித் தொகுதியின் பாராளுமண்ற உருப்பினரும் நிதியமைச்சரும் முன்னைநாள் ஸனாதிபதியுமான மாண்புமிகு ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் தலைமையில் இக்கல்லூரியின் முதல் பரிசளிப்பு விழாவை 21.01.1961ம் திகதியன்று “பழைய மாணவர் சங்கம்“ மிக வெற்றிகரமாக நடாத்தியதோடு தொடர்ந்தும் பல பரிசளிப்பு விழாக்களை நடாத்தியும் உள்ளனர்.

நாளொரு வண்ணம் வளர்ச்சியுற்ற இப்பாடசாலையில் 02.01.1951ம் திகதியன்று S.S.C. வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. வளர்ந்தோர் கல்விக்கான மேல் மாகாணத்தின் முதலாவது தமிழ் மொழிமூல முதியோர் வகுப்பொன்றும் இக் கால எல்லைக்குள் இங்கு தொடங்கி வைக்கப்பட்டதையும் நாம் மறக்கமுடியாது. பழைய மாணவர் சங்கத்தின் அயராத உழைப்பின் காரணமாக மாணவர்களின் பாடசாலை வருகை அதிகரிக்கலாயிற்று. குறிப்பாக பெண் பிளிளைகளின் வருகையிலும் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டது. இக்காரணிகளால் மீண்டும் இடநெருக்கடி ஏற்படவே மஹரைத் தொகுதியின் உறுப்பினராகவும், உணவு, கூட்டுரவு, சிறுகைத்தொழில் அமைச்சருமான திரு. எஸ். கே. கே. சூரியாரச்சி அவர்கள் மூலம் 80‘  20‘ அளவு கொண்ட கட்டிடம் ஒன்று பெறப்பட்டது. இது இன்று “இக்பால் மண்டபம்“ என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு வளர்ந்து வரும் பாடசாலை தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுக்கிணங்க 01.05.1963 ம் திகதி முதல் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது.

வளர்ச்சிப்படிகளில் வெற்றியுடன் அடியெடுத்து வைத்த எங்கள் மகா வித்தியாலத்தில் 1967ம் ஆண்டு க.பொ.த. உயர்தர வகுப்பு கலைப்பரிவு ஆரம்பிக்கப்பட்டது. தரமுயர்ந்த வித்தியாலயத்தின் அதிதியவாசியத் தோவைகளுள் ஒன்றான நூலகம் ஒன்று அமைய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்ட பலரின் நன்முயற்சியால் மர்ஹூம் எம்.ஜே.எம். லாபிர் ஹாஜியார் அவர்களின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட கல்வி நூற்றாண்டின் “சியவஸ வாசிகசாலை“ 1066இல் அன்றைய கல்வியமைச்சர் திரு ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன் 80‘  20‘ அளவிலான கட்டிடம் ஒன்றும் வழங்கப்படலாயிற்று இன்றைய “ரூமி மண்டபம்“ இக்கட்டிடம் ஆகும்.

பெருகி வரும் மாணவர் தொகைக்கேற்ப மென்மேலும் கட்டிட வசதிகள் தேவைப்பட்ட போது பெற்றோர் பலரின் பெறுமுயற்சியால் நிறுவப்பட்ட தற்காலிகக் கட்டிடம் மஹ்ரூப் கம்பனி சார்பில் நிரந்தரமாக்கப்பட்டது. “பாத்திமா மண்டபம்“ என இன்றும் இது அழைக்கப்படுகின்றது.

இது கால வரை முஸ்லிம் வித்தியாலயம் என வழங்கப்பட்ட இக்கல்லூரிக்கு நாமம் ஒன்று சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையொன்று நெடுநாளாக இருந்தமையால் “அல் முபாறக்“ எனும் திருப் பெயர் 1970ம் ஆண்டில் சூடப்பட்டது. இக்காலப் பகுதியில் தான் விஞ்ஞான அறையொன்றும் கல்வியமைச்சு மூலம் கிடைத்தது. மாணவர்களது விளையாட்டுத் திறனை வளர்பதற்கு மைதானமொன்றின்மை பெருங்குறையாக இருந்த வேளையில் 2 ஏக்கர் 15 பேர்ச் நிலத்தை அன்றைய மகரைத் தொகுதி உறுப்பினரும், உணவு, கூட்டுரவு, சிறுகைத்தொழில் அமைச்சருமான திரு. எஸ். கே.கே. சூரியாரச்சி அவர்கள் பெற்றுக் கொடுத்தார்.

ஏற்கனவே விஞ்ஞான அறையொன்று பெறப்பட்டமையால் 1971 ம் ஆண்டு தொடக்கம் 6ம் வகுப்பிலிருந்து விஞ்ஞான பாடம் போதிக்கப்படலாயிற்று. இதே ஆண்டில் இங்கிருந்து சர்வ கலாசாலைக்கும் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இங்கு வரும்  ஆசிரியர்களுக்குத் தங்குமிட வசதிக்காக மள்வானையை தம்பிற்நதகமாகக் கொண்ட ஆசிரியர்களிணைந்து ஆசிரியர் விடுதியொன்றை நிறுவியுள்ளதோடு அல்ஹாஜ் எம்.ஆர். அப்துர் ரஹ்மான் அவர்களால் 120‘   20‘ அளவு கொண்ட “ஹாஜி அப்துர் ருஹ்மான்“ மண்டபம் அமைக்கப்பட்டது. மஹ்ரூப் கம்பனி, மொஹமட் தாஹா அன்ட் கம்பனி சார்பில் நிறுவப்பட்ட 80‘  20‘ அளவிலான வேலைக்கூடம், பெற்றார் பழைய மாணவர் நிறுவிய அதிபர் விடுதி, அதிபர் காரியாலயம், மின்னிணைப்பு போன்றன 24.01.1976ம் திகதி நடைபெற்ற பெருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டமை காரணமாக அல் முபாறக்கில் அபிவிருத்தி துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

இத்தகைய வளர்சியால் கல்வியிலும் இதர துறைகளிலும் சிறந்த பெறுபேறுகள் பெறப்பட்டமை காரணமாக அல் முபாறக்கை நாடி வரும் வெளியூர் மாணவர்களின் தொகை அதிகரித்தன. எனவு மாணவர்களுக்கான விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டதோடு மாணவியருக்கான தனியான விடுதியொன்றும் ஆரம்பிக்கப்பட்டது. 21.07.1976ல் ஆரம்பிக்கப்பட்ட அல் முபாறக் நலன்புரி மன்றத்தின் பொறுப்பில் விடுதிகள் விடப்பட்டன. முன்னைநாள் கல்வியமைச்சர் “காயிதே மில்லத் அல்ஹாஜ் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்“ அபற்றுத் தந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 03.07.77ல் விழாவில் திறந்து வைக்கப்பட்டதோடு பொருட்காட்சியொன்றும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீர்நினியோகத் திட்டம் அன்றே ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்லூரிக்கென தனியான வாத்தியக் குழு ஒன்றில்லாதிருந்த குறை 1979ல் நீங்கியது. விளையாட்டு முயற்சிகளை வரிவாக்கும் நோக்கில் 5 ஏக்கர் நிலம் அரசு மூலம் பெறப்பட்டது.

தற்பேதைய மாணவர் விடுதியமைந்துள்ள 80‘   20‘ அளவிலான கட்டிடம் ஹாஜி எம்.எல்ஏ. றிபாய்(   ) அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டதாகும். 12.02இ80 முதல் தொலைத் தொடர்பு வசதியும் பூர்தியாகியது. பல் துறைகளிலும் வளர்ச்சியடைந்த இக் கலைக்கூடம் 14.05.80ம் திகதி முதல் மத்திய கல்லூரியாகத் தரமுயர்ந்தது. பிரமுகர் ஒருவரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அழகுறு பள்ளிவாசல் மாணவரின் ஆன்மீகத் துறைவளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றுகின்றது. அப்துர் ரஹ்மான் மொகமட் ஸாலி ஞாபகர்த்த “ரஸீன் ஸாலி“ பற்சிகிச்சை நிலையமும் பல்வைத்திய நிபுணரொருவருடன் இப்பிரதேச சகல மாணவர்களுக்கும் சிறப்பாக பணியாற்றுகின்றது. அன்றைய கல்வி, இளைஞர் விவகார, வேலைவாய்ப்பு அமைச்சரும் இன்றைய பிரதமருமான கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் மூலம் பெறப்பட்ட 100‘  20‘ அளவு கொண்ட மூன்று மாடிக் கட்டிடமும், மள்வானை கல்வி தொழிநுட்ப அபிவிருத்தி மன்றம் அணைந்து அமைத்த நவீன மனையியற் கூடம் 1987 பிரதேச கம் எதாவத் திட்டம் தொடர்பாக ஹிஜ்ரா மண்டப மேல்மாடியில் அமைக்கப்பட்ட உயர்தர வகுப்பு விஞ்ஞான ஆய்வு கூடம் என்பன 05.03.88 ல் நடைபெற்ற 65ம் ஆண்டு நிறைவுப் பெருவிழாவின் போது திறந்து வைக்கப்பட்டன. கந்த வத்த ஆரம்ப பிரிவுக்கான காணியில் மாகொலை முஸ்லிம் நிலையத்துக்கான அடிக்கல் அன்றைய தினம் நடப்பட்ட போதிலும் பல்வேறு தடைகள் காரணமாக அவ்வேலை தடைபட்டிருந்தது. 1991 ஜனவரியில் ஊர்மக்ளின் அயராத முயற்சியினாலும் சிரமதானத்தாலும் மைதானமூடாக பாதையமைத்து கந்த வத்த ஆரம்பப் பிரிவுக்கான கட்டிடம் 04.02.1992ல் திறந்துவைக்கப்பட்டது. இதே காணியில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் என்.எம். புஹார்தீன் அவர்களின் நிதியொதக்கீட்டில் 60‘  28‘ அளவிலான கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது 7 வகுப்புக்களுடன் ஆரம்பப் பிரிவு இங்கு இயங்கி வருகின்றது. மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஜனாப் அனீஸ் சரீப், காமினி குணரத்ன,சீமன் பாலசிங்க ஆகியோரின் நிதியொதுக்கீட்டைக் கொண்டு அமைக்கப்படவுள்ள 80‘  32‘ அளவிலான கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

மேல் மாகாண சபை உறுப்பினர் திரு. சுரனிமல் ராஜபக்ச அவர்களால் இவ்வாண்டு கல்லூரிக்கான மேலைத்தேதய வாத்தியக் கருவிகள் பெற்றுத்தரப்பட்ட. அம்பிகா நகை மாளிகையினர் கல்லூரி முன்னால் அமைத்துத் தந்துள்ள மருத்துவ சிகிச்சை நிலையமும், இக்கல்லூரியின் பழைய மாணவரான அஹமத் மிஹிலார் முஹம்மது பஸூல் ஜிப்ரி என்பவரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட முதலாவது கணனியைக் கொண்ட திருத்தியமைக்கப்பட்ட கணனிப் பரிவு இன்றைய மாபெரும் விழாவின் போது எங்கள் பிரதம அதிதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளன.

இன்று 71 ஆண்டுகளைக் கடந்து தன் சேவையை அர்பணித்து நிற்கும் எங்கள் அல்முபாறக் 38 அதிபர்களைச் ந்தித்துள்ளதுடன் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சகல வசதியும் அடங்கிய “பிரார்த்தனை மண்டபம்“ இதனகத்தே அமைந்து எல்லாம் நிறைந்த “அல் முபாறக் தேசிய கல்லூரி“யாக அகிலமெங்கும் பிரகாசிக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.


NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Make a Free Website with Yola.