நல்லமரமும் நச்சு மரமும்

ஆசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை

நூல்     - தமிழின்பம்

பாடல்கள்

“தோயும் திரைகள் அலைப்பத்

தோடார் கமலப் பள்ளி

மேய வகையில் துஞ்சும்

வெள்ளை யன்னம் காணாய்“

  • நல்லார் கைப்பட்ட நெல்வம்

“ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு“

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கட் படின்“

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின்“

  • பேதையர்க் கைப்பட்ட நெல்வம்.

“நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று

“நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கட் பட்ட திரு“

அரும்பதங்கள்

வேங்கை            -    புலி

வேழம்               -    யானை

அலக்கணுற்றான்     -    துன்பமடைந்தான்

வலியற்றவர்         -    வலிமையற்றவர்

திரை                -    அலை

கயம்                -    குளம், கெபய்கை, தடாகம்

துயில்               -    நித்திரை

துஞ்சும்              -    நித்திரைசெய்யும்

தேயும்               -    படியும், அணையும், பொருந்தும்

கமலம்               -    தாமரை

பாசிலை             -

தரு                  -    மரம்

கவின்               -

ஊருனி              -    குளம்

திரு                 -    செல்வம்

கவை                -    கிளை

கொம்பு              -    கிளை

நச்சப்படாதவன்      -    ஈயாதவன்

இன்னாது            -    கூடாதது

இலங்குதல்          -    விளங்குதல்

பேதையர்            -    அறிவில்லாதவர்

வெள்ளியர்                -    அறிவற்றவர்

பாடலில் உள்ள அணிகள்

உவமை

“......அப்பொய்கையில் இலங்கிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அருகே அழைப்பன போல் அசைந்தன......“

“......அருந் தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேரந்தன....“

“.......கதிரவன் வெம்மையைத் தடுப்பதற்கு ஓங்கிய பாசிலைப் பந்தர் வேய்ந்தாற் போன்று விளங்கிய மரத்தின் நிழலில் இருவரும் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்தார்கள்.....“

“....ஆற்று வழியாகவும் ஊற்று வழியாகவும் நன்னீரை தன்னகத்தே நிரப்பிக் கொள்ளும் இப்பொய்கை போல், அறிவுடையார் நல்வழிகளால் ஈட்டிய பெரும் பொருள் நிறைந்த பெண்ணைகளாய் விளங்குவர்.“

“பொய்கை எப்போதும் தண்மை வாய்ந்து விளங்குவது போல், அறிவுடைய செல்வரும் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குவார்கள்.“

“வருந்தி வருவோருக்குத் தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல், கல்வியும் செல்வமும் பூத்த மேலோர் வறிஞர்க்கு வரையாது பொருள் வழங்கும் வள்ளல்களாய் விளங்குவர்கள்.“

“பெரியார்பால் அமைந்த செல்வம், ஊருணியின் நீர்போல ஊராருக்கே முழூவதும் பயன்படுவதாகும்.“

“தன் இனிய பழங்களால் பசிநோய் அகற்றி, குளிர் நிழலால் களைப்பை மாற்றி, பட்டையால் பிணியைப் போக்கி, பலவகையாகப் பயன்படுதல் போல, அறிஞரிடம் அமைந்த செல்வம் வரியாருக்கு பலவகையிற் பயன்படுதல்“

“தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன்மரம் போலவும், வாழவதே பண்புடைமையாகும்.“

“நச்சு மரத்தில் அமைந்த நன்னிறக் கனிகள், பேதையர் கைப்பட்ட செல்வம் போல் பிறருக்கு இடர்விளைப்பனவாகும்“

உருவகம் -

“..கற்பகத் தருவென கவின் பெற விளங்கிய....“

தற்குறிப்பேற்றம்

“தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல அலைகள் கரையருகே வந்தன.“

வினாக்கள்...

தரம் 11

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others

Make a Free Website with Yola.