இயல்புச்
சொல்வழக்கு

சொற்களையும் சொற்றொடர்களையும் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தாமல் உள்ளபடி வழங்குதல் இயல்புச் சொல்வழக்கு எனப்படும்.

வகைகள்

இலக்கணம் உடையது, இலக்கணப் போலி, மரூஉ என்பன இயல்பு வழக்கில் அமைந்தவை.


இலக்கணம் உடையது

இலக்கணத்தின்படி அமைந்த சொற்கள்.

.கா.:

வளம், இன்பம், களவு போன்ற தனிமொழிகள்

மாநிலம், நற்றிணை போன்ற தொடர்மொழிகள்


இலக்கணப்போலி

தொடர்மொழிகளின் வரிசையை மாற்றி வழங்குதல் இலக்கணப்போலியாகும்.

.கா.:

இல்முன், நகர்புறம் என்பவற்றை முன்றில், புறநகர் என்று வழங்குதல்


மரூஉ

கிளவிகளை எழுத்துக்குறைத்தும் திரித்தும் வழங்குதல் மரூஉ எனப்படும்.

.கா.:

யாவர் - யார்

இந்நாடு - இந்தநாடு

 மரூஉ

மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது.

மரூஉ என்றால் உயிர் அளவெடை.

எடுத்துக்காட்டுகள்

  • யார் - ஆர்
  • சர்க்கரை - சக்கரை
  • உபாத்தியாயர் - வாத்தியார், வாத்தி
  • போழ்து - பொழுது, போது
  • இருக்கின்றது - இருக்கிறது, இருக்குது, இருக்கு, ஈக்கு, கீது
  • பருத்தித்துறை - பருத்துறை
  • துருவுபலகை - திருவலை
  • கறிவேப்பிலை - கருவேப்பிலை

மரூஉ என்பது தமிழ்ச் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:

  • தஞ்சாவூர் என்பது தஞ்சை ஆவது
  • புதுச்சேரி என்பது புதுவை ஆவது
  • சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
  • உறையூர் என்பது உறந்தை ஆவது.

 

வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:

  • வருகிறது என்பது வருகுது (நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை அவர்களின்கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”)

போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துக்களில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:

  • சாம்பல் என்பது சாம்பர்

நன்னூல் பாடல்

நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.

 

தகுதிச் சொல்வழக்கு

சொற்களையும் சொற்றொடர்களையும் அவற்றின் இயல்பான பொருளிலல்லாமல் வேறு பொருள் தருமாறு தகுதியாக்கிப் பயன்படுத்தி வழங்குதல் தகுதிச் சொல்வழக்கு எனப்படும்.

வகைகள்

இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பன தகுதி வழக்கில் அமைந்தவை.


இடக்கர் அடக்கல்

இடக்கர் எனப்படும் அருவருக்கத்தக்க செயல்களையும் பொருளையும் மனதில் அடக்கிக்கொண்டு தகுதியாக்கிச் சொல்லுதல்.

.கா.:

மலம் கழுவுதலை கால் கழுவுதல் என்றல்


மங்கல வழக்கு

வருத்தமும் அச்சமும் தரும் சொற்களைத் தவிர்த்து அவற்றினிடத்தில் நயம் தரும் சொற்களைத் தகுதியாக்கிச் சொல்லுதல்.

.கா.:

ஒருவர் இறந்துவிட்டார் என்று சொல்வதற்கு மாற்றாக மறைந்துவிட்டார் அல்லது துஞ்சினார் என்றல்.

 

குழூஉக் குறி

ஒரு துறையினரோ, வேறு குழுவினரோ தங்களுக்குள் சில சொற்களைத் தகுதியாக்கி வேறு பொருள் தருமாறு பயன்படுத்துதல்.

.கா.:

சாராயம் குடிப்பதை தண்ணீர் அடித்தல் என்றல், யானைப்பாகர் ஆடையைக் 'காரை' என்றல்

நன்னூல் பாடல்

நன்னூலின் பாடல் 267 சொல் வழக்கைப் பற்றி உரைக்கிறது. அப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

இலக்கணம் உடையது இலக்கணப் போலி
மரூஉஎன்று ஆகும் மூவகை இயல்பும்
இடக்கர் அடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும்முத் தகுதியோடு ஆறாம் வழக்கியல்.

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.