வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

  • தெரிநிலை வினைமுற்று

  • குறிப்பு வினைமுற்று 

எச்சம் இரண்டு வகைப்படும். அவை

  • பெயரெச்சம்

  • வினையெச்சம்

பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.

.கா: படித்த மாணவன்

தெரிநிலை பெயரெச்சம்

காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்

.கா:

  • படித்த மாணவன்
  • படிக்கின்ற மாணவன்
  • படிக்கும் மாணவன்

இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ள்ன. இவ்வாறு, காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும்.


குறிப்புப் பெயரெச்சம்

காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும்.

.கா:

  • நல்ல மாணவன்
  • அழகிய மலர்

நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை

வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும்.


வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.

.கா: படித்துத் தேறினான்

தெரிநிலை வினையெச்சம்

காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்

.கா: படித்துத் தேறினான்

குறிப்பு வினையெச்சம்

காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்

.கா: மெல்ல நடந்தான்

 

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.