உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

உரிச்சொல் இருவகைப்படும்

  • ஒரு பொருள் குறித்த பல சொல்
  • பல பொருள் குறித்த ஒரு சொல்

.கா

ஒரு பொருள் குறித்த பல சொல்

  • சாலப் பேசினான்.
  • உறு புகழ்.
  • தவ உயர்ந்தன.
  • நனி தின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்

  • கடிமனை - காவல்
  • கடிவாள் - கூர்மை
  • கடி மிளகு - கரிப்பு
  • கடிமலர் - சிறப்பு

இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்

பெயர் உரிச்சொல்

ஒரு பெயர்ச்சொல்லின் தன்மையை உணர்த்தும் சொல்லே பெயர் உரிச்சொல் எனப்படும்.

வினை உரிச்சொல்

ஒரு வினைச்சொல்லின் தன்மையை உணர்த்தும் சொல்லே வினை உரிச்சொல் எனப்படும்.

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.