தொகை வகைகள்

தொகையென்பது யாது?

          இரு சொற்கள் சேர்ந்து வருவது தமிழிலக்கணத்தில் தொகையெனப்படும். (-ம்) செந்தாமரை (செம்மை+தாமரை). தொகைகள்: வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று பலவகைப்படும். அவை பின்வருமாறு:-

I.  வேற்றுமைத் தொகை:

          இரு சொற்களுக்கிடையே "", "ஆல்", "கு", "இன்", "அது", "கண்" முதலான உருபுகள் மறைந்திருக்குமானால் அது வேற்றுமைத் தொகையாம்: -

எடுத்துக்காட்டு:- 

1.  இரண்டாம் வேற்றுமை:
(
-கா)தமிழ் கற்றான் - "" மறைந்துள்ளது.
இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா): தயிர்க்குடம் - "" உருபும், உடைய எனும் சொல்லும் மறைந்துள்ளன.

2.  மூன்றாம் வேற்றுமை:
(
-கா)தலை வணங்கினான் - "ஆல்" மறைந்துள்ளது
மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா): பொற்குடம் - "ஆல்" உருபும் செய்த எனும் பயனும் மறைந்துள்ளது.

3.  நான்காம் வேற்றுமை:
(
-கா)நோய் மருந்து - "கு" மறைந்துள்ளது.

4. ஐந்தாம் வேற்றுமை:
(
-கா)மலையருவி - "இல்" () "இன்" மறைந்துள்ளது
ஐந்தாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா)புண்ணீர் - "இல்" எனும் உருபும் இருந்து என்னும் பயனும் மறைந்துள்ளன

5.  ஆறாம் வேற்றுமை:
(
-கா)தமிழர் பண்பு - "அது" மறைந்துள்ளது
(
-கா)அவன் வண்டி - "உடைய" மறைந்துள்ளது

6.  ஏழாம் வேற்றுமை:
(
-கா)மணி ஒலி - "கண்" மறைந்துள்ளது
ஏழாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்கத்தொகையும்:-
(
-கா)வயிற்றுத்தீ - "கண்" உருபும், தோன்றிய என்னும் பயனும் மறைந்துள்ளன.

II. வினைத்தொகை:-

          இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களூம் இருசொற்களுக்கு இடையில் மறைந்திருப்பின் இவை வினைதொகை எனப்படும். எளியவழி: (1) இத்தொகையில் இரு சொற்களே இருக்கும் (2) முதலில் இருக்கும் சொல் வினைச் சொல்லாக இருக்கும் (3) இரண்டாவது சொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்: -

§ (-கா)
"சுடுசோறு" -
சுடுகின்ற சோறு (நிகழ்காலம்)
சுட்ட சோறு (இறந்தகாலம்)
சுடும் சோறு (எதிர்காலம்)

III.      பண்புத்தொகையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும்:-

          பண்புப் பெயர்ச்சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்ந்து வருமாயின் அவை பண்புத்தொகையெனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இருபெயரொட்டுப் பண்புத்தொகையெனப்படும்:-

பண்பாவன: குணம்(நன்மை, தீமை), உருவம்(வட்டம், சதுரம்), நிறம்(நீலம், பசுமை), எண்ணம்(ஒன்று, பத்து), சுவை(துவர், காரம்). 

§ (-கா)
பண்புத்தொகை:
"பண்புத்தொகை" "சேவடி", "செங்கண்", "நெடுங்கடல்", "மூதூர்", "தண்தயிர்", "பைந்தொடி", "வெண்சிலை", "நாற்படை"

§ (-கா)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
"கைத்தலம்" "பலாமரம்", "மடித்தலம்", "இந்தியநாடு", "விற்படை", "வெண்தயிர்", "ஒண்டொடி", "கருஞ்சிலை", "நாற்படை"

IV. உவமைத் தொகை:-

          உவமைத் தொகை கண்டுபிடிக்க (1) இரு சொற்களுள்ள தொகைச் சொல்லாக இருக்கவேண்டும். அதில் முதற்சொல் ஒரு உவமைச்சொல்லாக இருத்தல் வேண்டும். இதுவே உவமைத்தொகை

§ (-கா)
பானைவாய்:
இதில் பானை என்பது உவமை (பானையின் வாயை போன்ற)

§ (-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"
மதிமுகம்" "மலரடி", "துடியிடை", "கமலக்கண்", "கனிவாய்", "தேன்மொழி", "செங்கண்", "மான்விழி", "வாள்மீசை"-

V.  உம்மைத் தொகை:-

          உம்மைத் தொகை கண்டுபிடிக்க (1) சேர்ந்த இரு சொற்களும் தொடர்புள்ள சொல்லாக இருக்கவேண்டும்.(-கா) மாடுகன்று. (2) இரு சொற்களுக்கிடையில் "உம்" சேர்ப்பின், பொருள் சரியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இருப்பின் அது உம்மைத்தொகை என்று கொள்க:-

§ (-கா)
சேர சோழ பாண்டியர்:
இதில் சேரரும், சோழரும் , பாண்டியரும் என்று பொருள் தரும்

§ (-கா)
மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"
வேண்டுதல் வேண்டாமை" "அருளாண்மை", "தாய்தந்தை", "நரைதிரை", "காயிலைக்கிழங்கு", "கபிலபரணர்"

VI. அன்மொழித் தொகை:-

          இதுவரையிற் கூறிய தொகைகளில் அல்லாத சொற்கள் மறைந்துவருமாயின் அது அன்மொழித்தொகையாகும். மேலும் இவ்வன்மொழித்தொகை முன் சொன்ன ஐந்து தொகைகளில் ஒன்றாக இருக்கும். (-கா) "ஆயிழை வந்தாள்" - இதில் ஆயிழையென்பது காலங்காட்டாத வினைத்தொகை (ஆராய்ந்த இழை, ஆராய்கின்ற இழை, ஆராயும் இழை). ஆயின் இவ்விடத்தில் அந்த இழையணிந்த பெண்ணென்று பொருளாததால், இது வினைத்தொகைப் புறத்தெ பிறந்த அன்மொழித்தொகை எனப்படும். இவ்வாறே மற்ற தொகைகளின் புறத்தே இந்த அன்மொழித்தொகை அமைந்திருக்கும்:-

§   மேலும் சில எடுத்துக்காட்டுகள்:
"கோற்றொடியைக் கொன்று என் செய",
"
ஏந்திழை ஈமக் கடனிறுவிப் போது"
"
வீமன் திருமகளாம் மெல்லியலை",
"
ஆயமும் காவலும் ஆயிழை தனக்கு",
"
தந்துயர் காணா தகைசால் பூங்கொடி",
"
விளங்கிழை தமியன் ஆனாள்",

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.