நளவெண்பா


மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்தது.

அமைப்பு

மகாபாரதத்திலே கௌரவர்களுடன் சூதாடித் தோற்ற பாண்டவர்கள் தங்கள் நாட்டை விட்டுக் காட்டிலே வாழ்கின்றனர். அவர்களைப் பிரகதசுவர் என்னும் முனிவர் சென்று காண்கிறார். தமக்கு நிகழ்ந்தவற்றையிட்டுக் கவலையுடன் இருந்த தருமரைத் தேற்றுமுகமாக முனிவர் அவருக்குக் கூறியதாக இந் நூல் அமைந்துள்ளது.

சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 405 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 147 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 90 வெண்பாக்களும் உள்ளன.

நளன்

நளன் என்பவன், இந்தியாவின் பழைய கதை ஒன்றின் கதைத் தலைவன் ஆவான். இக் கதை, புகழ் பெற்ற வடமொழி இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள துணைக் கதைகளுள் ஒன்று. இக் கதை பின்னர் பல மொழிகளிலும் தனி நூல்களாக எழுதப்பட்டன. ஸ்ரீஹர்ஷரின் நைஷதம் என்னும் வடமொழி நூலும், புகழேந்திப் புலவரால் நளவெண்பா என்னும் பெயரிலும், அதிவீரராம பாண்டியரால் நைடதம் என்னும் பெயரிலும் எழுதப்பட்ட தமிழ் நூல்களும் குறிப்பிடத் தக்கவை.


இக் கதைகளின்படி, நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பீடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.


நளன் இந்தியாவில் பெருமளவில் அறியப்பட்ட கதை மாந்தர்களுள் ஒருவன் ஆவான்.

புகழேந்தி

புகழேந்தி நளவெண்பா எழுதி புகழ்பெற்ற சோழர் கால புலவர் ஆவார். இவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. புகழேந்தி, புலவர் ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவர் என்ற செய்தி வழிவழியாக வழங்கப்பட்டு வருகிறது. நளவெண்பா மிகச் சிறந்த 400 வெண்பாக்களையுடையது; இதன் காரணமாக வெண்பாவிற் புகழேந்தி என்றும் புகழப்படுகிறார்.

புகழேந்தி பற்றிய கட்டுக்கதைகள்

புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகவும் பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், புகழேந்தி மீது பொறாமை கொண்டான் என்றும் கூத்தனுக்கும் புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது என்றும், கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான், பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை.

நளவெண்பா

செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் என்ற நூல் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாக இருக்கவேண்டும். ஆனால் இதுவும் சந்தேகத்திற்குரியதே! புகழேந்தி ஒட்டக்கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்திருக்க வேண்டும், புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர் இதன் காரணமாகவே வழக்கத்தில் இருந்தது. நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது, சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; இதன் காரணமாகத் தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் மட்டுமே கையாளக் கூடியதாக வெண்பா இருந்தது, அத்தகைய இலக்கணங்கள் உடைய வெண்பாவில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக புலவ புகழேந்தி இருந்தார். புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையனவாகயிருந்தன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது.

இலக்கியச் சிறப்பில்லாத வேறு பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழேந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபாகத்தான் இதைப் பார்க்க முடியும் ஏனென்றால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறுதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை.

வாழ்ந்த காலம்

மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம்.

தரம் 11

தரம் 10

NIE | Ministry of Education  | School Net | Department Examination 

AL-Mubarak Central College
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others
Make a Free Website with Yola.