வெண்பா
வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரைக் கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்
தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.
1. திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்றி முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.
2. நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.
3. முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.
4. நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
5. நீதி வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
6. திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.
வகைகள்
- குறள் வெண்பா
- சிந்தியல் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
- சவலை வெண்பா
இன்னிசை வெண்பா
இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிகள் கொண்ட ஒரு வெண்பா வகை. நேரிசை வெண்பா என்பதும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா வகையே. எனவே வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகின்றன.
இலக்கணம்
இரண்டாவது அடியில் தனிச்சொல் அமைவதும், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகளுடன் அமைவதும் நேரிசை வெண்பாவுக்கான இலக்கணம். எனவே இன்னிசை வெண்பாவில் இவ்விலக்கணங்கள் அமைந்திரா.
- இன்னிசை வெண்பாவில், ஒரே வகையான அல்லது இரண்டு வகையான எதுகைகள் அமையுமானால், இரண்டாவது அடியில் தனிச்சொல் வராது. ஏனைய அடிகளில் வரலாம்.
- இரண்டாவது அடியில் தனிச்சொல் வந்தால், வெண்பா ஒரே வகையான எதுகையைக் கொண்டோ, இரண்டு வகையான எதுகைகளைக் கொண்டோ வராது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட எதுகை வகைகளைக் கொண்டு அமையலாம்.
எடுத்துக்காட்டு
யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
தாரேயுஞ் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து
மேலேயுள்ள பாடலில் இரண்டாம் அடியில் சீரேயும் என்னும் தனிச்சொல் வருகிறது. எனினும், முதல் இரு அடிகளிலும் எதுகைத் தொடை அமைந்து இருக்க மூன்றாம், நான்காம் அடிகள் எதுகையின்றி அமைவதால் இப்பாடல் மூன்று விகற்பம் உடையதாகிறது. இரண்டாம் அடியில் தனிச்சொல் இருந்தபோதும், இரண்டுக்கு மேற்பட்ட விகற்பங்கள் அமைவதால் இது இன்னிசை வெண்பா ஆகிறது.
கீழே காணும் பாடலில் நான்கு வரிகளிலும் ஒரேவகை எதுகைத் தொடை அமைந்து ஒரு விகற்பம் கொண்டதாக இருப்பினும், இரண்டாம் அடியில் தனிச்சொல் எதுவும் இல்லாததால் இதுவும் ஒரு இன்னிசை வெண்பாவாகிறது.
கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.
நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும். நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும்.
- பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டிருத்தல்.
- நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
- இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
- நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.
எடுத்துக்காட்டு
நளவெண்பாவில் உள்ள பின்வரும் செய்யுள் நேரிசை வெண்பாவுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
அஞ்சல் மடவனமே உன்ற னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்
இது நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா. இதன் இரண்டாவது அடியில் விஞ்சியது என்ற சொல் தனிச்சொல் ஆகும். முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையையும் (அஞ்சல் - வஞ்சி), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (காணப் - மாணப்) கொண்டு அமைந்துள்ளன. இதனால் இது ஒரு நேரிசை வெண்பா ஆகின்றது.
பின் வருவது நான்கு அடிகளிலும் ஒரே வகையான எதுகை வரும் நேரிசை வெண்பாவொன்று ஆகும்.
நெல்லுக்கி றைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
பஃறொடை வெண்பா
நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படும் என்பதும் சிலரது கருத்து.
நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களில் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா என்னும் வேறுபாடுகள் இருப்பதுபோல், பஃறொடை வெண்பாக்களிலும் நேரிசை, இன்னிசை வேறுபாடுகள் உண்டு என்று சிலர் கூறுகிறார்கள்.
எடுத்துக்காட்டுகள்
கீழேயுள்ளது ஆசாரக்கோவை என்னும் நூலில் வருகின்ற ஒரு பஃறொடை வெண்பாவாகும். இது ஐந்து அடிகளால் அமைந்துள்ளது.
முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்
குறள் வெண்பா
குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது.
எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
“ mfu Kjy ntOj;njy;yhk; Mjp
gftd; Kjw;Nw AyF “
சிந்தியல் வெண்பா
சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.
சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,
1. இன்னிசைச் சிந்தியல் வெண்பா
2. நேரிசைச் சிந்தியல் வெண்பா
NIE | Ministry of Education | School Net | Department Examination
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others