காப்பியங்கள்:
- பெருங்கதை (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
ஐப்பெருங் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவக சிந்தாமணி (சைனம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
- வளையாபதி (70 செய்யுள்கள் கிடைகின்றன)
- குண்டலகேசி (புத்தம், நிலையாமை)
ஐஞ்சிறுகாப்பியங்கள்
- உதயணகுமார காவியம் (சைனம், அரசன் உதயணன் வரலாறு)
- நாககுமார காவியம் (சைனம், தற்போது கிடைக்கவில்லை)
- யசோதர காவியம் (வடமொழி தழுவல், உயிர்கொலை கூடாது)
- நீலகேசி (நீலி என்ற பெண் சைன முனிவர் சைன சிறப்பை எடுத்தியம்பும் காப்பியம்)
- சூளாமணி (சைனம், திவிட்டன் விசயன் கதை, துறவு-முக்தி, வடமொழி தழுவல்)
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலை சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார்.
சிலப்பதிகாரம் புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
சமண மதத்தைச் சார்ந்த முனிவரான இளங்கோ, தன்னுடைய காவியத்தின் எவ்விடத்தும் தனது மதக் கருத்துக்களையோ, அல்லது தனது சேர நாட்டின் பெருமையை மற்ற நாடுகளை இழித்துரைத்தோ கூறாதது இந் நூலின் நடுநிலைமைக்கு மேலும் அணி சேர்ப்பதாக திகழ்கிறது.
பொருளடக்கம்
1. கதைச் சுருக்கம்
2. கதாப்பாத்திரங்கள்
3. புகார் காண்டம்
4. மதுரைக் காண்டம்
5. வஞ்சிக் காண்டம்
6. மொழிபெயர்ப்பு
கதைச் சுருக்கம்
சோழ நாட்டைச் சார்ந்த மாசாத்துவான் எனும் பெரு வணிகனது மகன் கோவலனும் மாநாய்க்கன் என்பவனது மகள் கண்ணகியும் மணம் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்துவந்தனர். தலைக்கோல் பட்டம் பெற்ற, ஆடற்கலை அழகி மாதவி கணிகையர் குலத்திற் பிறந்தவளாவாள். அவளின் கானல் வரிப்பாடலின் போது மனம் மயங்கி கண்ணகியைத் தவிர்த்து மாதவியுடன் இன்பத்தில் திளைத்து தன் செல்வம் முழுதும் இழந்தான் கோவலன்.
கோவலன் தன்னைப் பிரிந்து சென்றபோதும் கற்பொழுக்கம் சிறிதும் பிறழாமல் அவனுடன் மனதளவிலேயே வாழ்ந்துவந்தாள் கண்ணகி. செல்வம் முழுதும் இழந்த கோவலன் மாதவியை நீங்கி கண்ணகியிடம் சேர்ந்தான். கண்ணகியின் காற்சிலம்பை விற்று வரும் பொருளில் வாணிகம் செய்ய விரும்பி, பாண்டிய நாட்டுக்கு அவளுடன் பயணம் மேற்கொண்டான்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது மனைவியின் காற்சிலம்பை செப்பனிட தன் பொற்கொல்லனிடம் அதை அளித்திருந்தான். அதை களவாடிய பொற்கொல்லன் சிலம்பை காணவில்லை என பாண்டியனிடமே முறையிட்டிருந்தான்.
இந்த நிலையில் பாண்டிய நாட்டிற்கு சிலம்பு விற்க வந்த கோவலன், தனது மனைவி கண்ணகியை புத்த துறவி கவுந்தியடிகளது பாதுகாப்பில் இருத்தினான். கண்ணகியின் விலைமதிப்பற்ற காற்சிலம்பை அரசனுக்கு விற்க விரும்பி, அவளது ஒரு காற்சிலம்பை மட்டும் எடுத்துக்கொண்டு அரசவை பொற்கொல்லனை சந்தித்தான். கண்ணகியின் காற்சிலம்பு அரசியின் சிலம்பை ஒத்திருந்தது. வஞ்சம் மிகுந்த பொற்கொல்லன், காவலர்களை அழைத்து கோவலனே அரசியின் சிலம்பை களவுசெய்தவன் என பொய்யுரைத்தான்.
வழக்கை தீர விசாரிக்காத நெடுஞ்செழியன், "கொண்டக் கள்வனை கொணர்க" என்பதற்கு பதில் "கொன்றக் கள்வனை கொணர்க" என்று கூறி விட்டான். ஆதலால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கருதி அவன் கொலைக் களத்தில் கொல்லப்பட்டான்.
கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி, தன்வசமிருந்த மற்றொரு காற்சிலம்புடன் அரசவை விரைந்தாள். அரசனிடம் நீதி கேட்டாள். அரசியின் ஒரு காற்சிலம்பில் இருந்ததோ முத்து மணிகள். கண்ணகியின் காற்சிலம்போ மாணிக்கப் பறழ்களைக் கொண்டிருந்தது.
தவறிழைத்ததை உணர்ந்த நெடுஞ்செழியன், "யானோ அரசன்? யானே கள்வன்" என்றுரைத்தவண்ணம் தரையில் வீழ்ந்து உயிரிழந்தான். பின்னர் பாண்டியமாதேவியும் உயிரிழந்தாள்.
கோபம் தணியாத கண்ணகி, தன் மார்பைக் கிள்ளி மதுரையின் மீது எறிந்தாள். அவளது கற்பின் கணலைத் தாங்க இயலாமல் மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது.
பின்னர் சேரநாட்டுக்கு வந்தாள் கண்ணகி. கோவலன் இறந்து 14 நாட்கள் கழி்ந்தபின்னர் வின்னுலகிலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதிலிருந்த வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான்.
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை தோன்றினாள். கணிகையர் குலத்திற் பிறந்திருந்தாலும், கோவலனையன்றி வேறொரு ஆடவனை மனத்தும் நினையாது வாழ்ந்த மாதவி புத்தமதத்தைத் தழுவி துறவறம் பூண்டு வாழ்ந்தாள்.
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நிலைப்பாடுகளாவன
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
கதாப்பாத்திரங்கள்
கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.
கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழிவினை காரணமாக உயிரிழந்தவன்.
மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர் , கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கதை
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காபியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒருப் புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் தனதுத் தோழியும் பூப்பரிக்கச் சென்றிருந்தப்போது, உதயகுமரன் என்றச் சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதலில் விழுந்தான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிப்பள்ளவம் என்றத் தீவில் கொண்டேவிட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒருப் புத்தப் பீடத்தில் அமர்ந்துத் தனது முன்பிரப்பைப் பற்றி அறிந்தாள். அதன்பிறகுக் கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மனிப்பள்ளவத்திற்கு அழைத்து வரப்பட்டால் என்பதைக் கூறி, முன்று அதிசிய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள எழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி கயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையானக் கயசண்டிகையின் கணவன் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் உடயகுமரனைக் கொலைச் செய்துவிட்டான். இதற்காகக் கயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைதுச் செய்யப்படுகிறாள் ஆனால் தனதுத் தாயாரின் உதவியில் விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்றுத் தந்து ஞானப்பிதாவானக் கண்ணகியிடம் உரையாடி அறிவுரைப் பெற்றாள். அத்திடன் அனைத்து மதங்களின் நிறைக்குறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்றுத் தனது ஆசானான அரவன அடிகளிடம் குறிப்புகள் பெற்று ஒரு முழுமையானப் புத்தத் துரவியாகித் தவத்தில் ஆழ்ந்தாள்.
கதாப்பாத்திரங்கள
மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள், இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தால் கூட மணிமேகலை அனைத்துத் தடைகற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தார். பிறகு தன் விருப்பமான புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தனது தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.
உதயகுமரன் - சோழ மன்னன், மனிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன், நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்று உதயகுமரன் கதாப்பாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவளது துறவியாகவேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளை பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் கஞ்சணன் என்பவன் உதயகுமாரனை கொலைச் செய்துவிட்டான்.
சுதமதி - மணிமேகலையின் நம்பகமானத் தோழி. மணிமேகலையை மணிப்பள்ளவத்தில் விட்டு அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததை கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரேத் தோழி சுதமதிதான். அக்காலக்கட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்துள்ளார் சுதமதி. அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.
NIE | Ministry of Education | School Net | Department Examination
(National School)
Malwana
T.P: 0112571552
E.Mail: alm@schoolnet.lk
Home | Al-Mubarak | Ramzy | School Pic Gallery | Staff | For Student | For Teacher | Exam paper | Others